Total Pageviews

Sunday, May 29, 2016

Jawaharlal Nehru - இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார்


Jawaharlal Nehru - இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார்

http://sugavanam-tamil-readings.blogspot.in/2016/05/jawaharlal-nehru.html

https://en.wikipedia.org/wiki/Jawaharlal_Nehru

இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் சுதந்திரம் கிடைத்தவுடன் உருவான டஜன் கணக்கான பிரச்சனைகளை திறமையாகவும் நேர்மையாகவும் கையாண்டு இருக்கிறார். பிடிவாதமாக இந்தியாவை ஜனநாயக நாடாக அறிவித்து தன்னையும் காந்தியையும் தீவிரமாக எதிர்த்த அம்பேத்காரையே சட்ட அமைச்சராக நியமித்து அரசியல் சாசனம் எழுதப் பணித்திருக்கிறார். இன்றளவும் உலகமே போற்றும் ஜனநாயகத் தூண்களை பெரும் அக்கறை, பொறுமையோடு நிறுவி இருக்கிறார். பெண்கள் மற்றும் ஒடுக்கப் பட்ட இனத்தவருக்கு சட்ட ரீதியாக பெரும் மாற்றங்கள் கொண்டு வர உழைத்திருக்கிறார். இந்தியாவை ஒருங்கிணைக்க பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஏழ்மை மிகுந்திருந்த, படிப்பறிவற்ற ஒரு தேசத்தை நவீன உலகுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்களிப்பு அவருடையது.

காஷ்மீர், சீனா மாதிரி பல்வேறு பிரச்சனைகள் அவரால் தீர்க்க முடியவில்லை. அதை வைத்துதான் அவரை வலதுசாரிகள் தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அறுபது ஆண்டுகள் ஆகியும் அந்தப் பிரச்சனைகள் தீரவில்லை என்பதே அவை எவ்வளவு சிக்கல் நிறைந்தவை என்பது தெரியும். தவிர காஷ்மீர் மற்றும் சீனா இரண்டு பிரச்சனைகளையும் தீர்க்க அவருக்குப் பின் எந்தப் பிரதமரும் அவர் அளவுக்கு முயற்சி செய்யவில்லை.

இதை எல்லாம் தாண்டி திறமையான எழுத்தாளர், வரலாற்று அறிஞர், பேச்சாளர். பெரும் படிப்பார்வம் கொண்டவர். இலக்கியம், இசை, மது, மாது, தம்மு விஷயங்களில் ரசனைக்கார ஆசாமி.

நேருவுக்குப் பின் அவரின் திறமை/நேர்மையில் பாதி அளவு கூட கொண்ட ஒரு பிரதமரை இந்தியா இன்னமும் பார்க்கவில்லை.


நேருவைப் பற்றி அதிகம் படித்ததில்லை.

 நிறைய படிக்கணும்.