Total Pageviews

Sunday, June 24, 2012

எண்டோசல்பான் என்ற கொடிய பூச்சிக்கொல்லி புற்று நோயை உண்டுபண்ணவல்லது ...




உடல் ஊனம் அல்ல! மன ஊனமே கொடியது!

“யுவராஜுக்கு புற்று நோய்? சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். நோய் ஆரம்ப நிலையில் இருப்பதால் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள் நாட்டில் உள்ள பெருந்தலைகள் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் யுவராஜ் உடல் நலம் பெற்று நாடு திரும்ப வேண்டும் என வாழ்த்தினார்கள்”

இது அண்மையில் வந்த செய்தி. மனிதரைப் பாதிக்கும் கொடிய நோய்களில் ஒன்று புற்று. இதற்கு சரியானசிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை. புற்று நோயால் செத்துப் போனவர்களைவிடப் புற்று நோய்க்கான சிகிச்சையால் செத்துப் போனவர்களே அதிகம் என்று மணிப்பால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறியுள்ளார்.

புற்று நோயாளிகள் அனுபவிக்கும் மனவேதனையையும், உடல் வேதனையையும் சொல்லால் வருணிக்க முடியாது.என்று ஹர்மிளா குப்தா (டெல்லியில் சேவை மையம் வைத்திருப்பவர்) கூறுகிறார். தலைநகர் டெல்லியில் மட்டும் ஒரு லட்சம் புற்று ணோயாளிகள் உள்ளார்கள். ஆண்டுக்குப் பத்தாயிரம் பேர் புதிதாக்ப் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள் என்கிறார் ஹர்மிளா குப்தா. மேலும் இந்தியாவில் கருக்குழாய் புற்று நோயால் 7 நிமிடத்துக்கு ஒரு பெண் பலியாவதாக கூறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

புற்று நோய்க்கான காரணியை “கார்சினோஜென்” என்று அழைக்கிறார்கள். புகை இலை ஒரு கார்சினோஜென். புகையை உறிஞ்சி அடக்குவோர்க்கு நுரையீரல் புற்று நோய்; புகை இலையை மெல்வோர்க்கு வாயில் புற்று நோய்.; புற்று நோய் தடுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் பீடி, சிகரெட், புகை இலை தயாரிப்பைத்தடை செய்யாதது ஏனென்று புரியவில்லை.

புற்று நோயை உண்டு பண்ணக்கூடிய மற்றுமொரு ‘கார்சினோஜென்’ - பயிர் சாகுபடியில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் . பயிர்கள் அறுவடையாகும் போது எஞ்சிய நஞ்சாக தானியம், காய்கனி, முட்டை, பால், இறைச்சி அனைத்திலும் இவை காணப்படுகின்றன.

ஆண்டுதோறும் இவை நிலம், நீர், காற்று, செடிகளில் ஒரு லட்சம் டன் தெளிக்கப்படுன்றன. எண்டோசல்பான் என்ற கொடிய பூச்சிக்கொல்லி புற்று நோயை உண்டுபண்ணவல்லது என்று கண்டறிய 40 ஆண்டுகள் பிடித்தது. இன்று உச்ச நீதிமன்றம் அதை தடை செய்துள்ளது.

நன்மை செய்யும் பூச்சிகளையும் பறவைகளையும் அழித்து ஒழிக்கும் இரசாயன உப்புகளையும், பூச்சி கொல்லி நஞ்சுகளையும் “கார்சினோஜெனிக்” முத்திரை குத்தி தடை செய்ய பதவியில் உள்ளவர்களுக்கு மனமில்லை. அது குடிமக்களின் பொறுப்பு போலும்.

கொடியது உடல் ஊனம் அல்ல! மன ஊனமே!

No comments:

Post a Comment