Total Pageviews

Sunday, May 27, 2012

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்.






கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். 





கீரை சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான். கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை- அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கீரைகளிலுள்ள கரோட்டின் சத்துப்பொருள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்க கீரைகளை நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கேரட்டின் சிதைந்து விடுகிறது. கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இது.........

பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம். பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு 50 கிராம். கீரை வகைகள் சிறு பிள்ளைகளுக்கு வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்டிரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகள் மாசுபடுகிறது.

எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தலாம். நன்கு கழுவி சுத்தம் செய்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வராது. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கரோட்டீன் சத்து வீணாகி விடும். கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
 

No comments:

Post a Comment