Total Pageviews

Friday, April 29, 2011

திருக்குறள் - 35



திருக்குறள் - 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள்: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்கு பொருந்தாதவையாகும்.

Thursday, April 28, 2011

திருக்குறள் - 34


திருக்குறள் - 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்.  மற்றவை ஆரவாரத்தை தவிர வேறொன்றுமில்லை.

Tuesday, April 26, 2011

திருக்குறள் - 33


திருக்குறள் - 33
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
பொருள்: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

Monday, April 25, 2011

திருக்குறள் - 32


திருக்குறள் - 32
அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
பொருள்: நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை. அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

Thursday, April 21, 2011

திருக்குறள் - 31

திருக்குறள் - 31
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பொருள்: சிறப்பையும் செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத் தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

Wednesday, April 20, 2011

திருக்குறள் - 30


திருக்குறள் - 30
அந்தணர் என்போர் அறவோர்மற்  றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள்: அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அருள் புரியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவர்.

Monday, April 18, 2011

திருக்குறள் - 29


திருக்குறள் - 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காதல் அரிது.
பொருள்: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால், அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

Monday, April 11, 2011

திருக்குறள் - 28


திருக்குறள் - 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பொருள்: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காடும்.

Sunday, April 10, 2011

பெண்ணென்னும் பேரழகு


பெண்ணென்னும் பேரழகு
----------
சலசலக்கும் சிற்றோடை.
அது உனது சிரிப்பை சொல்கிறது.
அடர்ந்த மரங்கள்.
அதன் குளுமையான நிழல்.
அது உன் இனிமைக்கு ஈடாகாது.
தென்றல் காற்றில் சலசலக்கும் மர இலைகள் சத்தம்.
அது உன் பேச்சுக்கு ஈடாகாது.
வானத்தில் அலை அலையாய் கரு மேகங்கள்.
அவை காற்றிலாடும் உன் கூந்தலுக்கு ஈடாகாது
தூரத்தே தெரியும் மலை முகடுகள்.
பரந்து விரிந்த புல்வெளிகள்.
அவை உன் அழகிற்கு ஈடாகாது

http://www.facebook.com/pages/Sugavanam-Tamil-Writings/106713212737036

Thursday, April 7, 2011

திருக்குறள் - 27


திருக்குறள் - 27
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி லான் கட்டே உலகு.
பொருள்: ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

திருக்குறள்............


பால்களோ மூன்று,
அடிகளோ இரண்டு,
வள்ளுவன் ஒருவன்,
வழங்கிய வரிகள்,
வையத்து இயல்பையும்,
...வைத்தடைக்கியது 1330ல்,
திருக்குறள்............

Wednesday, April 6, 2011

திருக்குறள் - 26


திருக்குறள் - 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செயற்கரிய செய்கலா தார்.
பொருள்: பெருமை தரும் செயல்களைப் புரிவோரை பெரியோர் என்றும், சிறுமையான செயல்களை அன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களை சிறியோர் என்றும் வரையறுக்கலாம்.

காவல் தெய்வம்

காவல் தெய்வம்

கருப்ப சாமி காவல் தெய்வமாம்
பிறகு எதற்கு கதவில் தொங்கும்
கனத்த பூட்டு !!!

Tuesday, April 5, 2011

திருக்குறள் - 24


திருக்குறள் - 24
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
பொருள்: உறுதி என்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவர், துறவு என்னும் நிலத்திற்கு ஏற்ற வித்தாவார்.

திருக்குறள் - 25




திருக்குறள் - 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
பொருள்: புலன்களை அடக்க முடியாமல் வழி தவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுபடுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.